fbpx

அதிர்ச்சி மரணம்..!! ’வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் காலமானார்..!! சோகத்தில் திரையுலகினர்..!!

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வெண்ணிலா கபடி குழு திரைப்பட புகழ் நடிகர் ஹரிவைரவன் இன்று காலமானார்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பிரபல காமெடி ஆன பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார். பரோட்டா காமெடியில் நடிகர் சூரி கடைக்காரரிடம் சென்று பந்தயத்துக்கு நாங்க வரலாமா என்று கேட்பார். அப்போது கடைக்காரர் இவனைத் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கூறுவார். அந்த இவனைத் தவிர… அந்த நபர் தான் நடிகர் ஹரிவைரவன். 

அதிர்ச்சி மரணம்..!! ’வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் காலமானார்..!! சோகத்தில் திரையுலகினர்..!!

இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், இரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வெண்ணிலா கபடி குழு திரைப்பட புகழ் நடிகர் “ஹரி வைரவன் ” 3.12.22 காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

அதிர்ச்சி மரணம்..!! ’வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் காலமானார்..!! சோகத்தில் திரையுலகினர்..!!

மதுரையை சேர்ந்த இவர் உடல்நலக்குறைவின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலையில் அதிக அளவு பிரச்சனை இருந்த காரணத்தினால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வந்த, ஹரிவைரவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

மனைவியின் கள்ளக்காதல் அம்பலம்.. ஓட்டலில் கள்ளக்காதலனுடன் கையும், களவுமாகப் பிடித்த கணவர்..!

Sat Dec 3 , 2022
உத்தரபிரதேச மாநில பகுதியில் அமன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அடிக்கடி போனில் பேசி கொண்டும், வெளியில் சென்று வருவதுமாகவும் இருந்துள்ளார். சில நாட்களிலே மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி அதனை பொருட்படுத்தவே இல்லை. இந்த நிலையில் தனது மனைவியை ஒரு ஓட்டலில் கள்ளக்காதலனுடன் அமன் கையும் களவுமாக பிடித்துள்ளார். […]

You May Like