fbpx

அதிர்ச்சி!. தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி!. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!

Playback singer: பிரபல பின்னணி பாடகி கல்பனா, துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக கல்பனா பணியாற்றி வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார். தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே நிசாம்பத் நகரில் கல்பனா வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரது வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, கல்பனா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் கல்பனாவை பரிசோதித்ததில், அவர் அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. தற்போது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Readmore: நாக தோஷம் போக்கும் நாகராஜ கோயில்.. மணல் தான் பிரசாதம்.. வியக்க வைக்கும் வரலாறு..!!

English Summary

Shocking!. Famous playback singer attempts suicide by taking sleeping pills!. Treatment in life-threatening condition!

Kokila

Next Post

இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி.. மாத சம்பளமாக ரூ.2 இலட்சம் வழங்கப்படும்....! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

Wed Mar 5 , 2025
Free German language training.. A monthly salary of about Rs. 2 lakh will be provided....! Tamil Nadu government's super announcement

You May Like