fbpx

பேரதிர்ச்சி..!! ரூ.60,000-ஐ தாண்டிய தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.600 உயர்வு..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!!

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜனவரி 22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200-க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 உயர்ந்து ரூ.7,525-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : “இனி மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி இல்லை”..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

English Summary

In Chennai today, the price of gold jewelry rose by Rs. 600 per sovereign, selling for Rs. 60,200.

Chella

Next Post

குடிபோதையில் செம ரகளை..!! பக்கத்து வீட்டுக்காரரை ஆபாச வார்த்தையால் வசைபாடிய வில்லன் நடிகர் விநாயகன்..!! அதிர்ச்சி வீடியோ..!!

Wed Jan 22 , 2025
A video of villain actor Vinayagan, drunk and talking obscenely at his home, is going viral on social media.

You May Like