தமிழ்நாட்டில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 23ஆம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது பெற்றோர், போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, மாணவியை பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிசேரியன் மூலம் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : அண்ணாமலையை பங்கம் செய்த கூல் சுரேஷ்..!! தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு படத்திற்கு ப்ரோமோஷன்..!!