புதுடெல்லியின் மயூர்விஹார் பகுதியில் வசிப்பவர் பொறியாளர் சித்தார்த் (37). இவரது மனைவி அதிதி (37). இவர்களுக்கு 8 வயது மகள் இருக்கிறார். அதிதியின் தாயார் மாயா தேவி (60). இந்நிலையில் சித்தார்த்திற்கும் அவரது மனைவி அதிதிக்கும் கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக, சிவில் மற்றும் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் நேற்று திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்தார்த், தனது மனைவி அதிதி, எட்டு வயது மகள் மற்றும் மாமியார் மாயா தேவி ஆகியோரை, கத்தியால் குத்தியுள்ளார். அவர்கள் மூன்று பேரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது. அவர்கள் மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மனைவி, மகள், மாமியாரை கத்தியால் குத்திய பொறியாளர் சித்தார்த்தை கைது செய்தனர்.