சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பசுமை எரிசக்தி பிரிவில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் ஐடி துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.