திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி புனித பிலோமினாள் பள்ளி அருகே மாநகராட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பை தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பை தொட்டியில் இருந்து குப்பையை அகற்றுவதற்காக சென்று பார்த்தபோது, குப்பைத் தொட்டியில் இரண்டு குறை மாத சிசுக்கல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
அத்துடன் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 பெண் குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்பை தொட்டி அருகே கிடந்ததால் அந்த சிசுக்களையும் நாய்கள் கடித்து குதறி இருக்கின்றன. இதில் ஒரு சிசுவின் தலை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 2 சிசுக்களும் ஒரே தாய்க்கு பிறந்ததா? அல்லது ஏதாவது கள்ள தொடர்பால் பிறந்த குழந்தைகளா? போன்ற பல்வேறு குணங்களில் விசாரணையை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் அதோடு, அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இருக்கிறதா? அதில் குழந்தைகளை வீசி சென்றவர்களின் முகம் பதிவாகி இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.