fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்பு..? உடனே இதை செய்யுங்க..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

நாட்டில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் குறைந்த விலையில் மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவா மாநில அரசு சுமார் 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளை திடீரென ரத்து செய்துள்ளது. ரேஷன் கார்டுதாரர் 6 மாதங்களுக்கு தொடர்ந்து ரேஷனில் பொருட்கள் வாங்கவில்லை என்றால், அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பது அரசாங்கத்தின் புதிய விதியாகும். மேலும் அதற்கு பதிலாக, மற்றொரு ஏழை குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். இந்நிலையில், தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் பெறாத ரேஷன் கார்டை தற்போது கோவா அரசு ரத்து செய்துள்ளது.

இந்த கார்டு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 2022 முதல் ஜனவரி 2023 வரை ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள். இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகார இயக்குநர் கோபால் பர்சேகர் கூறுகையில், ”ரேஷன் பொருட்கள் பெறாதவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனுடன், கார்டுதாரர்கள் ஏன் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். கோவா மாநிலத்தில் சுமார் 13.32 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், 80 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் எடுக்காதது பெரிய விஷயம். இப்படிப்பட்ட நிலையில், இவர்கள் ஏன் ரேஷன் எடுக்கவில்லை என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

Chella

Next Post

அவமானப்படுத்திய பெண்..!! வீடு புகுந்து பலாத்காரம் செய்து கொடூர கொலை..!! இளைஞர் பகீர் வாக்குமூலம்..!!

Mon Feb 20 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும், பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர், இப்பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் பாதிக்கப்பட்ட பெண், தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் மற்றும் ஊரின் பெரியவர்கள் அந்த இளைஞரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் […]

You May Like