fbpx

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை மேலும் உயருகிறது..!!

தமிழக முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் விலை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேறியுள்ளது.

தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. 2003-04ஆம் ஆண்டில் ரூ.3,639.33 கோடியும், 2004-2005-ல் ரூ.4,872.03 கோடியும், 2005-06-ம் ஆண்டில் ரூ.6,030.77 கோடியும், 2006-07-ம் ஆண்டில் ரூ.7,473.61 கோடியும், 2007-08-ம் ஆண்டில் ரூ.8,821.16 கோடியும், 2008-09-ம் ஆண்டில் ரூ.10,601.50 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை மேலும் உயருகிறது..!!

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடி அதிகரித்தது. கடந்த 2019-20ஆம் ஆண்டில் ரூ.33,133.24 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937ஆம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்தார்.

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை மேலும் உயருகிறது..!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளதால், கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. அதன்படி ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றின் மீது புரூப் லிட்டர் ஒன்றுக்கு 450 இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் கவலையில் உள்ளனர்.

Chella

Next Post

மனைவியின் நடத்தையில் சந்தேகம்..!! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்..!!

Fri Oct 21 , 2022
தாம்பரம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு கணவர் தலைமறைவாகி உள்ளார்.  சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், மகேஸ்வரி நகர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வரப்பிரகாசம் (55). இவரது மனைவி விசுவாசமேரி (50). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவி விசுவாசமேரி அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினசரி […]

You May Like