சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.65,880 விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது.
இதற்கிடையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை ஒரு காலக்கட்டத்தில் நிலைத்திருந்த பின்னர், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.62,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. சமீபத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.65,000-ஐ கடந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி 66,480-க்கு விற்பனையானது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்றும் இன்று உயர்த்தொடங்கியுள்ளது.
நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 65,560-க்கு விற்பனையான நிலையில் இன்றைய தினம் (மார்ச் 27) ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.65,880 விற்பனையாகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.40 உயர்ந்து ரூ.8,235-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை நேற்றைய தின விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.111,000-க்கும் விற்பனையாகிறது.
Read More: தங்க விலை உயர்வு எதிரொலி.. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு..!!