fbpx

இன்ஸ்டா, பேஸ்புக் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! இனி மெசேஜ் அனுப்ப முடியாது..!! மெட்டா நிறுவனம் அறிவிப்பு..!!

குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரபல சமூகவலைதள நிறுவனமான மெட்டா, கடந்த 2020ஆம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், பேஸ்புக்கின் மெசஞ்சர் (Messenger) செயலி மூலம் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தோடு அந்த சேவையை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இனி, இந்த வசதி மூலம் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் செய்ய முடியாது. ஆனால், ஏற்கனவே இருக்கும் உரையாடல்களை படிக்க மட்டும் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. மெட்டா, தனது மெசஞ்சர் தளத்தை என்ட்-டூ-என்ட் (end-to-end encryption) முறைக்கு மாற்றவிருப்பதால் இந்த சேவையை நிறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Chella

Next Post

நீங்கள் கால் ஆட்டிக்கொண்டே இருப்பவரா?… அதுக்கு காரணம் என்ன தெரியுமா?

Wed Dec 6 , 2023
உட்கார்ந்திருக்கும் போது கால்களை அசைப்பது அல்லது வேகமாக ஆட்டுவது பலரிடையே காணப்படும் பொதுவான பழக்கமாகும். இது மெதுவாக அசைப்பது அல்லது வேகமாக அசைப்பது என எதுவாக இருந்தாலும், இந்த மீண்டும் மீண்டும் செய்யும் இயக்கம் பெரும்பாலும் அவர்கள் அறியாமலேயே நிகழ்கிறது. சிலர் முழங்கால்களை அசைத்து அல்லது கால்களைத் தட்டுவதன் மூலம் இதைச் செய்கிறார்கள். இது பொதுவாக உட்கார்ந்திருக்கும் போது ஒன்று அல்லது இரண்டு கால்களின் தாள அசைவுகளை உள்ளடக்கியது. இது […]

You May Like