தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 566 சுங்கச் சாவடிகளில், தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகள் அமைந்துள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை இதற்கான கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் போன்ற வாகனங்களுக்கு 5 சதவீதமும், லாரிகளுக்கு 10 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டண உயர்வு குறித்த அறிக்கையை நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திடம் நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 25ஆம் தேதி சமர்ப்பிக்க இருக்கிறது. அமைச்சகம் அனுமதி அளித்ததும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.