fbpx

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

சாலை விபத்துக்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தில், தற்போது உள்ள அபராதத்தை விட பன்மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்தாலும் நீங்கள் ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டியது வரும். தற்போதெல்லாம் ஹெல்மெட் அணிவதற்கு கூட போக்குவரத்து காவலர்கள் அபராதம் போடுவதை பார்க்க முடியும். இந்நிலையில், புது போக்குவரத்து விதிகளின் படி நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்.

புது போக்குவரத்து விதிகளின் படி மோட்டார் சைக்கிள் (அ) ஸ்கூட்டர் ஓட்டும்போது ஹெல்மெட் ஸ்டிரிப் அணியாமல் இருந்தால் விதி 194D மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், உங்கள் ஹெல்மெட் மோசமாக இருந்தாலோ (அ) BIS முத்திரை இன்றி இருந்தாலோ ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ஹெல்மெட் அணிந்த பிறகும் புது விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை அரசு கடுமையாக்குகிறது. புது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

Chella

Next Post

பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் லியோ அப்டேட் கொடுத்த த்ரிஷா..!! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..!!

Mon Apr 17 , 2023
கோவையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா, லியோ படத்தின் அப்டேட்டை வெளியிட்டார். பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் நடிகை த்ரிஷா, நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வனில் சமுத்திரக்குமாரி பூங்குழலியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பேச வந்த நடிகை […]
பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் லியோ அப்டேட் கொடுத்த த்ரிஷா..!! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..!!

You May Like