fbpx

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம்..!!

தனி மனித போக்குவரத்து, நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் என அனைத்திலும், எரிபொருளும், மின்சாரமும் இன்றியமையாததாக உள்ளது. உலகின் பெட்ரோல், டீசல் தேவையை பெருமளவுக்கு சவுதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகள் பூர்த்தி செய்கின்றன. மேலும், தங்கள் நாட்டின் வருவாயை பெருக்கவும், விநியோக அமைப்பில் கட்டுப்பாட்டை கொண்டு வரவும், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலை நிர்ணயத்தில் ஒபெக் நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. சமீபத்திய ஒபெக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, மே மாதம் முதல், நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 60 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்தது.

இந்த ஒற்றை அறிவிப்பால், விலைவாசி மேலும் உயருமா? என்ற கவலையில் மக்களும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பா? என உலக நாடுகளின் அரசுகளும், தொழில் உற்பத்தி, வர்த்தகம் பாதிக்குமா என தொழில்துறையினரும் அச்சமடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான உடனே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 8% வரை அதிகரித்துள்ளது. ஆசிய சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.07% அதிகரித்து, 84 டாலராக உயர்ந்தது. அதேபோல் அமெரிக்காவில் WTI கச்சா எண்ணெய் விலை 5.17 சதவீதம் அதிகரித்து 80 டாலராக உயர்ந்தது. ரஷ்யா – உக்ரைன் போரால், ஏற்கனவே, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், ரஷ்யா நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்ததால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

கோடைக்காலத்தில் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளிலும் எரிபொருள், மின்சாரத்தின் தேவை அதிகமாகிறது. இதனால் பெட்ரோல், டீசலின் நுகர்வின் அளவும் கணிசமாக உயரும். மேலும் சில மாதங்களாக முடங்கியிருந்த சீன நாட்டின் பொருளாதாரம், தற்போது மீண்டும் விரிவாக்கத்தில் உள்ளதால் பெட்ரோலிய பொருட்களின் தேவை அதிகமாகிறது. இதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தொட வாய்ப்புள்ளதாக, பெட்ரோலிய பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 80% அதிகமாக, இறக்குமதியில் கச்சா எண்ணெயை நம்பியுள்ளது இந்திய நாடு. கொரோனாவுக்கு பின், சரிவைச் சந்தித்தாலும், மீண்டும் மேலே வர துடிக்கும் உலக நாடுகளின் பொருளாதாரம் என அனைத்து தரப்புக்கும் கவலை கொள்ளும் செய்தியே. இனி உணவுப் பொருள் விலை ஏற்றம், உற்பத்தி பொருள் விலை உயர்வு, பணவீக்கம் இதனால் மீண்டும் மீண்டும் வங்கி வட்டி உயர்வு என துயரங்கள் தொடர்கதையாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

Chella

Next Post

அதிர்ச்சி..!! தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்..!! பீதியில் பொதுமக்கள்..!!

Tue Apr 4 , 2023
தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்தியாவில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் […]

You May Like