fbpx

பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! விமானக் கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..?

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால், வெவ்வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விழாவை கொண்டாடி வருகின்றனர். அவற்றில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஹோலி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. மும்பை – கோவா கட்டணத்தில் 33%, புனே – டெல்லி 23%, டெல்லி-பெங்களூரு மற்றும் லக்னோ இடையே 20%, டெல்லி-ராஞ்சி வழித்தடத்தில் 13% கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்களின் முன்பதிவு கட்டணமும் அதிகரித்துள்ளதாக ஆன்லைன் பயண போர்ட்டலான இக்ஸிகோ தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஜெய்ப்பூர், கோவா, காஷ்மீர், துபாய், சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு இந்த ஆண்டு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி விமானக் கட்டணங்களும் இந்த வாரத்தில் 33% வரை அதிகரித்துள்ளதாகவும், வரும் நாட்களில் 50% வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

KYC அப்டேட் மோசடி.. ஒரே போன்கால்.. ரூ.7.38 லட்சம் பணத்தை இழந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்...

Wed Mar 8 , 2023
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, கவனமாக இருக்க வேண்டும்.. இந்நிலையில் KYC அப்டேட் செய்வதாக கூறி, சைபர் குற்றவாளிகள் செய்த மோசடியில் மும்பையை சேர்ந்த 72 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர், ரூ.7.38 லட்சத்தை […]

You May Like