fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! விலை அதிகரிக்குமே தவிர இனி குறையாதாம்..!! தக்காளி விலையால் தவிக்கும் மக்கள்..!!

தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. அவ்வப்போது ஒரு சில நாட்கள் மட்டும் விலை சற்று குறைந்த போதும், தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், கடந்த சில நாட்களாக மொத்த விற்பனையில் கோயம்பேடு சந்தையில், ரூ.80 வரை விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது.

ஆனால்ம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படிப்படியாக விலை அதிகரித்து திங்கட்கிழமை ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் புதன்கிழமை தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தக்காளி மொத்த விலையில் ரூ.10 அதிகரித்து ரூ.110 வரையிலும், சில்லறை விலையில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த விலையிலும் சில்லறையாகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. கா்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் பரவலாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், இனிவரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

தங்கம் விலை திடீர் உயர்வு.. தங்கத்தில் முதலீடு செய்யலாமா..?

Wed Jul 12 , 2023
தங்கம் சாமானிய மக்களின் நீண்ட கால சேமிப்பு கருவியாக இருக்கும் வேளையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை காரணமாக ரீடைல் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தாலும் தங்கம் வாங்கப்படும் அளவுகள் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள வேளையில் டாலர் மதிப்பு சரிந்தது மட்டும் அல்லாமல் பத்திர முதலீட்டு மீதான முதலீட்டின் லாபம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் பத்திர சந்தையில் இருந்து […]

You May Like