fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! 36,000 ஆசிரியர்களின் பதவிக்கு ஆப்பு..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக 2011இல் இருந்து மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தி வருகிறார். இவரது ஆட்சியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்து வந்தன. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியாக அமலாக்கத்துறையில் அடையாளம் கூறப்படும் திரிணாமுல் எம்எல்ஏ மானிக் பட்டாசார்யா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், 36,000 ஆசிரியர்கள் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார். காலியாக உள்ள பணியிடங்களை அடுத்த 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் மூலம் 2014இல் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதாகக் கூறி 2016இல் தொடக்கப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்ட 36,000 ஆசிரியர்கள் தங்கள் வேலையை இழக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் 2016-17 கல்வியாண்டில் இருந்து வேலை செய்ய தொடங்கியவர்கள். இந்த தீர்ப்பை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று வரவேற்றுள்ள பாஜக, கல்வித்துறையில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மேற்கொண்ட ஊழலின் ஆழத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்றுள்ளது.

Chella

Next Post

இனி ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்..!! சிவாங்கியின் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்..!!

Sat May 13 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக சிவாங்கி தனது இன்னசென்டான நடவடிக்கைகள், நிகழ்ச்சிக்கு இடையே அவர் பாடும் பாடல்கள் என ஃபேவரைட் கோமாளியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து, குக்காக களமிறங்கி ஆச்சரியமளித்தார். முதலில் சொதப்பினாலும் மெல்ல தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேஷன் ரவுண்டில் விஜே விஷால் மற்றும் ஷிவாங்கி போட்டி போட்டனர். […]
இனி ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்..!! ஷிவாங்கியின் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்..!!

You May Like