ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண். இவரது இளைய மகன் மார்க் சங்கர், சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் தான், அப்பள்ளியில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில், பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர், படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தீவிபத்தில் சிக்கிய மார்க் சங்கரின் நுரையீரலும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் உடனே மார்க் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், மகன் தீவிபத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், பவன் கல்யாண் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு சிங்கப்பூர் செல்லுமாறு கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வாக்குறுதி அளித்தப்படி பழங்குடியினருடன் செல்வதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து செய்யப்பட்டுள்ளதால், இதை முடித்துக் கொண்டு பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்வதாக கூறப்படுகிறது. அக்டோபர் 10, 2017 அன்று பிறந்த மார்க் சங்கருக்கு தற்போது 8 வயது, சிங்கப்பூரில் கல்வி பயின்று வருகிறார்.