fbpx

அதிர்ச்சி ரிப்போர்ட்..!! ஸ்மார்ட்போன்களால் குழந்தை காதல் திருமணம் அதிகரிப்பு..!! பெற்றோர்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் குழந்தை திருமண முறை என்பதை அரசு தீவிரமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமண விவகாரத்தில், சிறுமிகளை திருமணம் செய்யும் நபர், அவருக்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர் ஆகியோரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனாவுக்கு பின் தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சிறுமிகள் காதல் திருமணங்கள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்த நிலையில், அதனை சிறார்கள் படிப்பை தவிர பிற செயல்களுக்கு அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

இதில் 15 வயது முதல் 19 வயது வரையிலான சிறுமிகள், இளம்பெண்கள் காதல் வயப்பட்டு குழந்தை திருமணத்தில் சிக்கிக் கொள்கின்றனர். காதல் திருமணங்களில் 60 சதவீத சிறார் செல்போன் காதல் திருமணமே என ஆய்வுகள் கூறுகின்றன.

Chella

Next Post

ஓசியில் சாப்பாடு கேட்டு தகராறு..!! ஓட்டலில் வைத்து தீர்த்துக் கட்டிய ஊழியர்..!! வாடிக்கையாளர்கள் பதறியடித்து ஓட்டம்..!!

Thu Sep 21 , 2023
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை (50). கூலித்தொழிலாளியான இவர், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி அடிக்கடி ஓட்டல் நடத்திவரும் பச்சையம்மாளிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று மாலையும் தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த ராமு என்கிற […]

You May Like