வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!! விற்பனையில் உள்ள இந்த 83 மருந்துகள் தரமற்றவை…

‘நாட்டில் விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரமற்றவை’ என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய-மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பரில் 1,487 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 83 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது.


அதன் விவரங்களை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kathir

Next Post

மாணவர்களுக்கு எச்சரிக்கை!!! இந்த CBSE இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம்...

Sat Dec 17 , 2022
சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ‘சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல, போலி இணையதளம் ஒன்றை cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் உருவாக்கி உள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட்

You May Like