fbpx

2 ஹெலிகாப்டர்கள் மோதி சிதறும் பதைபதைக்கும் காட்சி..!! 10 பேர் பலி..!!

மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக 6-க்கும் மேற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.

அப்போது, 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்து நொறுங்கும் பதற வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. காலை 9.32 மணியளவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய RMN விசாரணைக் குழு அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோகமான சம்பவத்திற்கு மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Read More : வீட்டிற்கு ஏசி வாங்கினால் மட்டும் போதாது..!! இந்த விஷயத்தை பண்ணலனா கூலிங் இருக்காது..!!

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!!

Tue Apr 23 , 2024
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி, வீட்டு வாடகைப்படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படிக்கான சீலிங் ரேட் மாற்றியமைத்து நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 6 வகையான அகவிலைப்படி 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தினை கணக்கிட்டு ஆண்டிற்கு இருமுறை அகவிலை உயர்த்தப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த […]

You May Like