டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பள்ளி மாணவிகளின் போர்ன் மற்றும் பாலியல் பலாத்கார வீடியோக்கள் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைப்பது பற்றி டெல்லி மகளிர் ஆணையம் டுவிட்டருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மல்லிவால் ’’டுவிட்டர் ’’ தலைமையகத்திற்கும் டெல்லி காவல் நிலையத்திற்கும் சம்மன அனுப்பியுள்ளார். அதில் , டுவிட்டர் மற்றும் இணையதளங்களில் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் பள்ளி மாணவிகளின் பலாத்கார வீடியோக்கள் , பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பது பற்றி கொதித்தெழுந்துள்ளார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சிறுமிகளின் வீடியோக்களையும் இதில் வெளியிட்டுள்ளார்கள். இதில் அதிகப்படியான போட்டோக்களில் சிறுமிகள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளே உள்ளன. இதில் சிறுமிகளை தாக்குதலுக்குள்ளாக்கி அவர்களை வீடியோ எடுத்து வெளியிட்டும் வருகின்றனர். ஒருவரின் அனுமதியின்றி அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பெண்கள் , சிறுமிகள் , மாணவிகளின் முகம் கூட மறைக்கப்படாமல் உள்ளது.
’’அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அவர்கள் தூங்குபோது இருக்கக்கூடிய போட்டோ வீடியோக்களைக் கூட ஆபாசமாக வெளியிட்டுள்ளனர். இந்த குற்றவாளிகளின் கணக்குகளை முடக்கி அவர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற வீடியோக்கள் பணத்திற்காக விலை பேசப்பட்டு போடப்படுகின்றது. எனவே சமூக வலைத்தலங்கள் இதை அனுமதிக்கக்கூடாது ’’ என்றார்.
சில டுவிட்டர்களில் ’’ நான் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்துவிட்டேன். சிறுமிகளின் வீடியோக்களை டுவிட்டரில் எப்படி பதிவிட்டுள்ளார்கள். உடனடியாக அதை நீக்க வேண்டும். இது பற்றி கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதனால் பள்ளி மாணவிகள் , பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
இது போன்ற வீடியோக்கள் ஒரு தரப்பட்ட மக்கள் புகார் கூறுவதன் மூலம் அதை உடனடியாக நீக்க முடியும். ஆனால் , ஏன் இவை நீக்கப்படவில்லை. இது போன்ற வீடியோக்கள் எவ்வளவு இருக்கும் என சோதனை நடத்தப்பட்டது. ஏராளமான போஸ்ட்கள் உள்ளன. இது பற்றி புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.