தருமபுரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அரிசிக்கு பதில் இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. நிவாரணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு ரேஷன் கடைகளுக்கு வழங்கும் கோதுமையின் அளவை உயர்த்தியது. இதனால், அரிசிக்கு பதிலாக பொதுமக்கள் கோதுமையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தான், ரேஷன் கடைகளில் இனி சிறுதானியங்களும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சோதனை முயற்சியாக இரண்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர், விரைவில் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். தற்போது தருமபுரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அரிசிக்கு பதில் இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வெற்றியடைந்தால், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படு. மக்களின் ஆரோக்கியத்தை பெருக்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Read More : தவெக பெண் நிர்வாகியை ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய மாவட்ட செயலாளர்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!