fbpx

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு!. 70 பேர் துடிதுடித்து பலி!. 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

Terrorists Shooting: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் காவல் நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர்.

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து அதில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தாக்குதலில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து காவல்நிலையம், ரயில் பாதைகள், வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

துணை ஆணையர் ஹமீத் ஜாஹிர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஓட்டுநர்கள் கொல்லப்பட்ட பின்னர் குறைந்தது 10 டிரக்குகள் எரிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதிகாரியின் கூற்றுப்படி, பலியானவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று டான் செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான ரயில் பாதை மற்றும் பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவை பாகிஸ்தானின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் பாலமும் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரி முஹம்மது காஷிப் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட கிளர்ச்சிக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில், துணை ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த குழு கூறியுள்ளது. எனினும், இதை பாகிஸ்தான் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பலுசிஸ்தான் முதல்வர் சர்ஃபராஸ் புக்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Readmore: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை!. யூனுஸ் அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆயிரக்கணக்கான மாணவர்கள்!. 40 பேர் படுகாயம்!

English Summary

Over 70 killed in attacks on police stations, vehicles in Pakistan’s Balochistan

Kokila

Next Post

15 நாள் பயணம்... இன்று இரவு 10 மணிக்கு அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்...!

Tue Aug 27 , 2024
15-day trip... Chief Minister Stalin will leave for America at 10 tonight

You May Like