ஆடையை விலக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு மதவெறி கொண்ட கும்பல்களின் செயல் திருமாவளவன் கண்ணிற்கு தெரியவில்லையா..? என எச்.ராஜா கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. உள்நாட்டிலே அரசியலுக்கு எதிராக போராடும் திருமாவளவன், சீமான், சித்தராமையா உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். நாட்டு மக்கள் மீது இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர்களால் நாட்டுக்கு எதிராக எந்த பாதிப்பும் வராது என்பதை நிரூபிக்க முடியுமா..? ஆடையை விலக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு மதவெறி கொண்ட கும்பல்களின் செயல் திருமாவளவன் கண்ணிற்கு தெரியவில்லையா..?
பாரதத்திற்கும், பிரதமருக்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள் சமூகவிரோதிகள். காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் சட்டத்தை நாசம் செய்த போது நவ துவாரத்தையும் பா.சிதம்பரம் மூடிக் கொண்டிருந்தார். நீங்கள் எப்படி பாஜக அரசை விமர்சிக்க முடியும்..? பாஜக மட்டும் தான் சட்டத்தை மதித்து நடக்கும் கட்சி. திமுகவில் தற்போது 2 விக்கெட்டுகள் விழுந்திருக்கிறது. இதுபோன்ற தீர்ப்புகளால் திமுகவில் மேலும் பல தலைகள் உருளும். அதனை நாங்கள் பார்த்து ரசிப்போம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பால், முதல்வர் ஸ்டாலின் உளறிக் கொண்டிருக்கிறார். திராவிட அரசியலே மத வெறி தான். முதல்வர் வாயைக் குறைத்துக் கொள்வது நல்லது. அவரின் உடலை பேணுவதற்கு வாயை குறைத்துக் கொள்ள வேண்டு. நீட் தேர்வு குறித்து அஞ்சு கட்சி அமாவாசைக்கு என்ன தெரியும்..? அவர் செல்வப் பெருந்தகையா? அல்லது பெருந்தொகையா.?” என்று கடுமையாக விமர்சித்தார்.