உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துள்ளனர்.
பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கை சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே பிரிவில், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றிருந்த மனு பாக்கர், 242.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சீனாவின் யாவோ குயான்சுன் வெண்கலம் வென்றார். அதேபோல், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கனவே, இவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சுருச்சி சிங்குடன் இணைந்து ஒரு வெண்கலத்தை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இதெல்லாம் தேவையா..? 0.01 நொடியில் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்த இந்திய வீரர் நிதின் குப்தா..!! நடந்தது என்ன..?