fbpx

உஷார்!! அடிக்கடி ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? ‘ஷாப்பிங் டிஸார்டர்’ என்ற மன நோய்க்கு வித்திடும்!!

புது உடைகளும் பொருட்களும் எப்போதுமே மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிப்பவை. ஷாப்பிங் செய்வது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம், குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும். ‘ஷாப்பிங்’. அதனை சிறந்த பொழுதுபோக்காக கொண்டாடவும் செய்வார்கள். அதிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழும் பெண்களுக்கு வெளியே சென்று வருவதற்கான வாய்ப்பை ஷாப்பிங்தான் ஏற்படுத்திக்கொடுக்கும். மனதுக்கு பிடித்தமான பொருளை வாங்க செல்வதாக இருந்தால் இன்னும் குஷியாகிவிடுவார்கள்.

சிலர் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அது அவர்களுக்கு தேவையே இல்லை என்ற போதும் அதை வாங்கியே ஆகவேண்டும் என்று நினைப்பர். அந்தத் தீவிர மனஅழுத்தத்தின் ஆங்கிலத்தில் ‘கம்பெல்சிவ் பையிங் டிஸ்ஆர்டர்’ (Compulsive buying disorder (CBD) என்று பெயர். அதாவது ஒரு வகை மனநிலை கோளாறு ஆகும். தேவை அறிந்து பொருட்களை வாங்குவது வேறு. அவசியமின்றி பொருட்களை வாங்குவது வேறு. இவை இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனை கருத்தில் கொள்ளாமல் ஏற்படும் ‘ஷாப்பிங் டிஸார்டர்’ எனப்படும் மனநிலை கோளாறு ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் பாதிக்கும். குறிப்பிட்ட பொருட்கள் மீது அலாதி பிரியம் கொள்வது அதற்கு காரணமாக இருக்கலாம்.

ஷாப்பிங் டிஸார்டர் அறிகுறிகள் ;

  • தினசரியோ அல்லது அடிக்கடியோ ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.
  • மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக ஷாப்பிங் செல்வார்கள்.
  • கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால் பணத்தை பற்றி கவலைப்படாமல் அதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகை காலியாகும் வரை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
  • பிடித்தமான பொருட்களை பார்த்துவிட்டாலே மற்றவர்கள் முன்னிலையில் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
  • தற்போது தேவைப்படாத பொருட்களை வாங்குவார்கள். அதனை உபயோகப்படுத்தபோகிறோமா என்பதை பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். அந்த பொருள் பிடித்துவிட்டால் போதும். அதை வாங்கியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.
  • ஷாப்பிங் செல்வதற்காக பொய் பேசக்கூட தயங்கமாட்டார்கள். சில சமயங்களில் மட்டுமே செய்த தவறுக்காக வருத்தப்படுவார்கள். ஆனாலும் ஷாப்பிங் செல்வதை ஒருபோதும் தவிர்க்க மாட்டார்கள்.
  • ஷாப்பிங் செல்வதற்காக மற்றவர்களிடம் கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். அதேவேளையில் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள்
  • ஏற்கனவே பட்ஜெட் போட்டுவிட்டு ஷாப்பிங் சென்றிருந்தாலும் கூட அதையும் மீறி தாராளமாக செலவு செய்வார்கள்.
  • மனக்கவலை தரும் ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொண்டால் அதில் இருந்து மீள்வதற்காகவோ, அதை மறப்பதற்காகவோ ஷாப்பிங் செல்வார்கள்.
  • அளவுக்கதிகமான ஷாப்பிங் பழக்கமானது ஒருவரின் பொருளாதார, தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது.

மேலும் அவரை உணர்வுரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளச் செய்கிறது. இவர்களுக்கு தகுந்த சிகிச்சையளித்து சரிப்படுத்த வேண்டும். மனதிற்கு உற்சாகம் அளிக்கும் செரோடொனின் அதிகமுள்ள பாதாம்பருப்பு, சோயா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும். மேலும் தினமும் அரைமணிநேரம் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் மனநல ஆலோசகர்கள்.

Read more ; மகாராஜா பட நடிகைக்கு இப்படியொரு நோயா? கையை பாத்தீங்களா! லேட்டஸ்ட் போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!

English Summary

Some people see any product and think they have to buy it even if they don’t need it. The English name of that severe depression is ‘Compulsive Buying Disorder’. It is a type of mood disorder.

Next Post

பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்!! பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்...

Mon Jul 1 , 2024
Only a few know about Arvalem Caves in Goa. Arvalam Caves are located in Sankelim village of North Goa, 31 km from Panaji. These caves are said to date back to the 6th century. It is also known as Pandava Caves.

You May Like