fbpx

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க வேண்டுமா…? உடனே இந்த இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்…!

புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 29.02.2024 நள்ளிரவு 11:59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், 0427 2900142 தொலைபேசி எண் மற்றும் rjdtslm@gmail.com மின்னஞ்சலை தொடர்பு கொண்டும் விபரங்களை பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் விஜய்..!! டெல்லி விரையும் விஜய் மக்கள் இயக்கம்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

Sat Jan 27 , 2024
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். பள்ளி மாணவர்களிடத்தில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ என்ற திட்டம் தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் துவங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, […]

You May Like