ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது பற்றி தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் தெரிவித்திருப்பது யாதெனில் ;
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் தமிழக அரசின் கவனத்திற்கு வந்திருக்கிறது. மேலும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மனநல நிபுணர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் போன்றோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி வாழ்க்கையே அழித்துக் கொள்பவர்களை பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட பண நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் மேலும் பல சமூக ஒழுக்கமின்மை போன்றவை ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து புதிய அவசர சட்டம் கொண்டு வருவதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.
மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பான கருத்துக்களை கூற விரும்புவோர் குறிப்பாக பெற்றோர், ஆசிரியர், பொதுமக்கள், சமூக சேவகர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவங்கள் ஆகியோரிடமிருந்து, கருத்துக்களை கேட்க தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டு பற்றிய கருத்துக்களை கூற விருப்பபடுவோர் தங்கள் கருத்துக்களை homesec@tn.govt.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.