ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கிடப்பில் போடுவது, துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் தலையீடு அதிகமாக உள்ளது போன்ற புகார்களை முன்வைத்து ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆளுநருக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 10ஆம் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதியன்று சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விகள் தற்போது வெளியாகியுள்ளன.
➥ திருப்பி அனுப்பி, மீண்டும் பெற்ற மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியுமா..?
➥ தனிப்பட்ட அதிகாரம் என்பதன் செயல்பாடு என்ன..? அரசியல் சாசனம் அதை உறுதி செய்கிறதா..?
➥ அமைச்சரவையின் ஆலோசனைகளை ஆளுநர் கேட்க வேண்டுமா..? அல்லது தனித்து செயல்படலாமா..?
➥ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனக் கூற முடியுமா?
➥ அனைத்துவித மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்ப உரிமை உள்ளதா..?
➥ குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியல் சாசனம் மூலம் எப்படி கையாள்வது?
➥ ஜனாதிபதிக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா?
➥ அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு மத்திய அரசும், ஆளுநர் தரப்பும் ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More : சட்டென வந்து மோதிய மின்சார ரயில்..!! உடல் துண்டாகி துடிதுடித்து பலியான ஜோடி..? பெருங்களத்தூரில் பயங்கரம்..!!