fbpx

AC-யை பயன்படுத்தினாலும் கரண்ட் பில் வரக்கூடாதா..? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..!! இனி கவலையே இல்ல..!!

கோடை காலம் தொடங்கிவிட்டாலே பெரும்பாலான வீடுகளில் ஏசி உபயோகிப்பது அதிகரித்து விடும். ஆனால், ஏசியை முறையாக ஆன் மற்றும் ஆப் செய்யவில்லை என்றால் கட்டாயம் மின்சார கட்டணம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பலரும் தங்களது வீடுகளில் உண்டாகும் வெப்பம் தாங்க முடியாமல் உடனடியாக ஏசியை ஆன் செய்வர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த அறை குளிர்ச்சி அடைந்ததும் உடனடியாக ஏசியை ஆப் செய்வர். ஏனெனில், அப்படியே விட்டு விட்டால் மின்சார கட்டணம் உயர்வாக வந்துவிடும். ஏசியை பயன்படுத்தும் அனைவரும் ஆன் செய்வதை முறையாக செய்து விட்டாலும், ஆப் செய்வதில் தவறு செய்கின்றனர். இதனால் மின் கட்டணமும் அதிகரிக்கிறது.

ஏசியை சரியான முறையில் ஆப் செய்தால் மட்டுமே மின் கட்டணத்தை குறைக்க முடியும். பொதுவாக ஏசி ஆன் செய்வதற்கு முன் அனைவரும் ஸ்டெபிலைசரை ஆன் செய்வர். அதில் பச்சை நிற லைட் எரிந்த உடன் ஏசி ஆன் செய்யப்படும். அதுவே ஏசி ஆப் செய்யும்போது டைமர் செட் அப் அல்லது ரிமோட்டில் அப்படியே ஆப் செய்து விடுவோம். இதனால் மின் கட்டணம் உயர்வாகத்தான் வரும்.

பொதுவாகவே ஏசியை ஆப் செய்து விட்டாலும், ஸ்டெபிலைசர் ஆனது ஒரு வித மின்சாரத்தை எடுத்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் எக்கச்சக்கமான மின்சார கட்டணமானது வந்துவிடும். இதனை குறைக்க முதலில் ஏசி ஆப் செய்ததும் உடனடியாக ஸ்டெபிலைசரையும் ஆப் செய்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே கோடை காலத்தில் ஏசி உபயோகித்தால் கூட மின்சார கட்டணம் அதிகமாக வராமல் தடுக்க முடியும்.

Read More : செம குட் நியூஸ்..!! நடுத்தர வர்த்தகத்தினருக்கு புதிய வீடு..!! மத்திய அரசு இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Chella

Next Post

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை..! சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு..!

Fri Apr 26 , 2024
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு […]

You May Like