fbpx

Paris Olympics 2024 | இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து  அபார வெற்றி..!! 16 வது சுற்றுக்கு முன்னேற்றம்!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது நாள் போட்டியில் பிவி சிந்து குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 5ஆவது நாளில் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான குரூப் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டின் கூபாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து எஸ்டோனிய வீராங்கனைக்கும் கடும் நெருக்கடி கொடுத்தார்.

பிவி சிந்துவின் தடுப்பு ஆட்டத்தால் எஸ்டோனிய வீராங்கனையால் மேற்கொண்டு புள்ளிகளை சேகரிக்க முடியவில்லை. இதனிடையே முதல் செட்டை 21-க்கு 5 என்ற கணக்கில் பிவி சிந்து கைப்பற்றினார். இதில் முதல் செட்டை 21-5 என்று கைப்பற்றிய சிந்து, 2ஆவது செட்டை 21-10 என்று கைப்பற்றி 16ஆவது சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளார். எஸ்டோனிய வீராங்கனையின் இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய் வெளியேறினார்..

Read more ; FASTag New Rules | வாகன ஓட்டுநர்களே.. நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது FASTag புதிய விதிகள்.!!

English Summary

Shuttler PV Sindhu qualifies for Round of 16 with commanding win over Kristin Kuuba

Next Post

PM முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் கடன்..!! யாரெல்லாம் பெற முடியும்? மத்திய அரசு வெளியிட்ட நிபந்தனைகள்..

Wed Jul 31 , 2024
PM Mudra Loan- Only these people will get 20 lakhs in PM Mudra Loan, know who is included in the list

You May Like