fbpx

Covishield: கொரோனாவை தடுக்க போடப்பட்ட தடுப்பூசியால் பக்க விளைவுகள்..!! நீதிமன்றத்தில் நிறுவனம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Covishield: முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இந்தியா மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் சுமார் 174.94 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, கோவிஷீல்டு தடுப்பூசியால் இறப்புகள் மற்றும் உள்உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுவதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் ஏற்பட்டதாக 51 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இதுதொடர்பான விசாரணையின்போது, கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைத்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்க முடியவில்லையா..? இந்த பொருளை வாங்கினாலே போதும்..!!

Chella

Next Post

பரபரப்பு சம்பவம்…! நடுரோட்டில் குடுமி பிடி சண்டை போட்ட பள்ளி மாணவிகள்...!

Wed May 1 , 2024
உ.பி.யில் பள்ளி மாணவிகள் சாலையில் கட்டி புரண்டு சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்ததை அடுத்து, பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை அனைவரும் மொபைல் பயன்படுத்துகிறார்கள். அதுவும், இன்ஸ்டா, பேஸ்புக், உள்ளிட்ட சமூக ஊடங்களில் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர். சக்கலத்தி குடுமிபிடி சண்டை பார்த்திருப்போம். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 4 இளம்பெண்கள்  நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்டனர். […]

You May Like