fbpx

ரொம்ப ருசியான கேரள ஸ்டைல் களத்தப்பம்.! 20 நிமிஷத்துல சூப்பரான ஒரு ரெஸிபி.!

வழக்கமான ஸ்நேக்ஸ் செஞ்சி போரடிக்குதா.? கேரளா ஸ்டைலில் எளிமையான மற்றும் சத்து மிக்க களத்தப்பும் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதன் செய்முறையும் எளிது மற்றும் சுவையும் மிக அருமையாக இருக்கும்.

இதை செய்வதற்கு முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்து அதனை நன்றாக கழுவி 2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு அரிசியை மிக்சிக்கு மாற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் சோறு மற்றும் இரண்டு ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். மாவு பதத்திற்கு வந்ததும் இதனை மிக்ஸியிலிருந்து எடுத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

இப்போது அரிசி எடுத்த அதே கப்பில் வெல்லம் எடுத்து அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் நன்றாக தண்ணீரில் கரையும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். வெல்லம் காய்ச்சிய பிறகு அதனை எடுத்து அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து கால் டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 பின்ச் உப்பு சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கலக்க வேண்டும். இதனை நன்றாக கலக்கிய பின்னர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் குக்கரை வைத்து அதில் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி என்னை நன்றாக சூடானதும் நறுக்கி வைத்த தேங்காயை போட்டு நன்றாக வறுக்கவும். தேங்காய் பொன்னிறத்தில் வந்ததும் கரைத்து வைத்த மாவை எடுத்து இதில் ஊற்றி தீயை சிம்மில் வைத்து விசில் போடாமல் குக்கரை மூடி 10 நிமிடம் வேக விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து நன்றாக வெந்து இருக்கிறதா என பதம் பார்க்க வேண்டும். இப்போது அப்பம் நன்றாக வெந்து இருந்தாலும் குக்கரை மூடாமல் அதே இதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான களத்தப்பம் ரெடி.

Next Post

மக்களே சூப்பர் அறிவிப்பு..!! ஜனவரி 20ஆம் தேதி வரை வாங்கிக் குவிக்கலாம்..!!

Sat Dec 2 , 2023
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவையை அறிந்து நெய், வெண்ணெய், தயிர், பன்னீர், ஐஸ்கிரீம் மற்றும் நறுமண பால் வகைகளை 1,000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. […]

You May Like