மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் காவேரி நகர் அருகே உள்ள ஆரோக்கிய நாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு எஸ்.பி தலைமையின் கீழ் கூடுதல் எஸ்.பி, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். எஸ்.பி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிபவர் காவலர் வினீத். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
அதேபோல் குத்தாலம் காவல் நிலையத்தில் பெண் போலீஸாக பணியாற்றி வருபவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு எஸ்.பி அலுவலகத்தில் உள்ள ஓய்வு அறையில் இரவு நேரத்தில் இருவரும் கதவை பூட்டிக் கொண்டு தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் மற்றொரு போலீஸ் மூலமாக டி.எஸ்.பி-க்கு சென்றுள்ளது. உடனே டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று பார்த்துள்ளார். அறையின் கதவு உள்பக்கம் சாத்தப்பட்டு இருந்துள்ளது. இதைதொடர்ந்து டி.எஸ்.பி கதவை தட்டியுள்ளார். இதனால் கோவமான டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டுள்ளது. வினீத்தும், ரேகாவும் உள்ளே நின்றுள்ளனர். இதைபார்த்த டி.எஸ்.பி, எஸ்.பி அலுவலகத்தில் செய்கின்ற வேலையா இது என சத்தம் போட்டுள்ளார். `சாரி சார் தெரியாம செய்து விட்டோம். இதை பெரிது படுத்தாதீங்க’ என இருவரும் கெஞ்சியுள்ளனர். இந்த விஷயம் எஸ்.பி மீனாவிற்கு செல்ல அவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் குத்தாலம் காவல் நிலையத்திலிருந்து இரவு பணியை முடித்து விட்டு கிளம்பிய ரேகா பேருந்தில் மயிலாடுதுறை சென்று இறங்கியுள்ளார்.
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வினீத் தனது பைக்கில் ரேகாவை அழைத்துக் கொண்டு எஸ்.பி அலுவலகம் சென்று அங்கே இருவரும் தனிமையில் இருந்து தெரியவந்தது. இதையடுத்து, பணியில் ஒழுங்கீனமானவும், தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி மீனா உத்தரவிட்டார். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.