fbpx

’சார்.. ரூ.1,500 மட்டும் கொடுங்க’..!! போலீஸையே உல்லாசத்திற்கு அழைத்த கும்பல்..!! அரை நிர்வாண கோலத்தை பார்த்து ஆடிப்போன சப்-இன்ஸ்பெக்டர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமணன். இவர், நேற்று முன்தினம் நாகர்கோவில் கோர்ட் சாலையில் மப்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்களும், ஒரு வாலிபரும் லட்சுமணனிடம் சென்று பேசியுள்ளனர். அப்போது, “எங்களிடம் இளம்பெண் ஒருவர் இருப்பதாகவும் அவருடன் உல்லாசமாக இருப்பதற்கு ரூ.1,500 கொடுத்தால் போதும்” எனக்கூறியுள்ளனர்.

பின்னர், அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு அறையில் இளம்பெண் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டு சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உடனே வடசோி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், வந்திருந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் என தெரிந்ததும், 2 பெண்களும், அந்த வாலிபரும் தப்பியோட முயற்சித்தனர்.

ஆனால், அவர்களை சுற்றி வளைத்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே, அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை மீட்டு விசாரிக்கையில், நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் என்பதும், அவரிடம் பண ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இந்நிலையில், கொடைக்கானலை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 27), அவரது மனைவி அனு என்ற ராகவி (25), நாகர்கோவிலை சேர்ந்த சந்திர என்ற விஜயகுமாரி (56) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Read More : திடீரென வெடித்த தர்பூசணி சர்ச்சை..!! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் அதிரடி பணியிட மாற்றம்..!! சுகாதாரத்துறை உத்தரவு..!!

English Summary

The sub-inspector was shocked to see a young woman in a room, half-dressed.

Chella

Next Post

அண்ணா சிலை மீது திமுக - பாஜக கொடியை போர்த்திய மர்ம நபர்கள்..!! விடிஞ்சு பார்த்ததும் தஞ்சையே பதறிப்போச்சு..!!

Sat Apr 5 , 2025
The incident of the Anna statue in Thanjavur being draped with DMK and BJP flags has caused a stir.

You May Like