அயோத்தியில் நாளை மறுநாள் (ஜனவரி 22) ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தாண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்த விழா நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்இடையே, Sahixd டிஜிட்டல் கிரியேட்டர் தனது படைப்பாற்றல் மூலம் அயோத்தி விழாவுக்கு ஒரு சூப்பர் ஹீரோயிக் அம்சத்தை சேர்த்துள்ளார்.
அவர் மார்வெல் மற்றும் DC காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் ராம் மந்திர் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்தால் எப்படி இருக்கும் என்ற தனது கற்பனையை AI மூலம் புகைப்படங்களாக உருவாக்கியுள்ளார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸில் இருந்து பல சூப்பர் ஹீரோக்கள் ராமர் கோயிலில் தங்கள் சேவைகளை வழங்குவதையும், மக்களுடன் தொடர்புகொள்வதையும் அந்த புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.
அயன் மேன், சூப்பர்மேன், பேட்மேன், வொண்டர் வுமன், ஸ்பைடர் மேன், தோர், ஹல்க் மற்றும் டெட்பூல், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் தானோஸ், தி ஜோக்கர் மற்றும் லோகி போன்ற சில பிரபலமான காமிக் புத்தக வில்லன்களையும் அயோத்திக்கு சென்றுள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டார் வார்ஸ் படத்தின் கதாப்பாத்திரங்களையும், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் உரிமையாளரின் கேப்டன் ஜாக் ஸ்பாரோவாக நடித்த ஜானி டெப்பின் கதாபாத்திரத்தையும் சேர்த்துள்ளார். மேலும் ஹாரி பாட்டர், ஹெர்மாயின் உள்ளிட்ட கேரக்டர்களும் அயோத்தியில் செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளன.
அனைத்து புகைப்படங்களையும் காண: https://www.instagram.com/p/C2M3xscS_cE/?utm_source=ig_web_button_share_sheet
அயர்ன் மேன் மற்றும் பேட்மேன் இருவரும் ராமர் கோயிலுக்கு சேவை செய்வதை பார்க்க முடிகிறது. சூப்பர் ஹீரோ ஆடைகளுக்கு மேலே, காவி உடை அணிந்து கோவில் தளங்களை சுத்தம் செய்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தின் படைப்பாற்றலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறனர்.