சென்னையில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்பயிற்சி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதித்துறையும், காவல்துறையும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் தான், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் வெளிவராத வகையிலும், 14 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தண்டனைகள் ஜனவரி 25ஆம் தேதி முதல் சட்டமாகி அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான், ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்கேபி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பெண் ஒருவர் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். குடியரசு தினத்தன்று தனி அறையில் வைத்து அவருக்கு மற்றொரு உடற்பயிற்சி ஆசிரியரான அறிவழகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண் ஆசிரியை அளித்த புகாரின் பேரில் அறிவழகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : Accident | பைக் மீது அதிவேகமாக மோதிய டிப்பர் லாரி..!! துடிதுடித்து பலியான தொழிற்சாலை ஊழியர்..!!