fbpx

’சார் சுத்துப் போட்டாங்க’..!! 4 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த செய்தியாளர்..!! உயிருக்கு ஆபத்தான நிலை..!!

திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மர்மக்கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு. இவர், நேற்றிரவு வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது மறைந்திருந்த மர்மக்கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நேசபிரபுவை, காமநாயக்கன்பாளையம் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சம்பவ நடைபெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து நேசபிரபு, போலீஸார் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், தன்னை சிலர் நோட்டமிடுவதாகவும், தான் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வருவதாகவும், தன்னைப் பற்றி அந்த மர்மநபர்கள் விசாரித்ததாகவும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த நபர்கள் தன்னைச் சுற்றி வளைத்து விட்டதாகவும், தனது வாழ்க்கையே முடிந்து விட்டதாகவும் கூறி கதறியுள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கோர விபத்து!… 70க்கும் மேற்பட்டோர் பலி!… தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சோகம்!

Thu Jan 25 , 2024
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றுவருதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் மாலி, ஆப்பிரிக்காவின் தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இந்தநிலையில், தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. கடந்த வெள்ளிக்கிழமை […]

You May Like