fbpx

மணமேடையில் அக்கா திடீர் மரணம்!… தங்கையை மணமகளாக்கிய பெற்றோர்!… குஜராத்தில் சோகம்!

குஜராத்தில் திருமணத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மணப்பெண் உயிரிழந்த நிலையில், சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு அவரது தங்கையை மணமகளாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

குஜராத்தை சேர்ந்தவர் ரத்தோர். இவரது மகள் ஹீதலுக்கும் ராணாபாய் என்பவரின் மகன் விஷால் என்பவருக்கும் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவுசெய்துள்ளார். அதன்படி, குஜராத்தின் பாவ்நகரில் உள்ள பகவானேஷ்வர் மஹாதேவ் கோயிலில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் மணமக்களுக்கு சடங்குகள் செய்துக்கொண்டிருந்தபோது, மணமகளான ஹீதல், திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹீதலை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அடுத்து என்ன செய்வதென தெரியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதையடுத்து, உறவினர்களின் யோசனைப்படி, ஹீதல் இறந்துவிட்டதால் சடலத்தை ஐஸ்பெட்டியில் வைத்துவிட்டு, அவரது தங்கையை மணமகளாக்கி மணமகனுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Kokila

Next Post

பெரும் சோகம்‌‌...! 31 வயதான இயக்குனர் ஜோசப் சிகிச்சை பலனின்றி காலமானார்...!

Tue Feb 28 , 2023
இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் தனது 31 வயதில் காலமானார். அறிமுக இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் தனது 31 வயதில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனென்று உயிரிழந்தார். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஹெபடைடிஸ் நோயால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புதிய படம் ஒன்றை அவர் இயக்கி […]

You May Like