fbpx

சீதாராம் யெச்சூரியின் உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்..!! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாசப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல் தானம்

இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் மறைவை அடுத்து அவரது உடல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சீதாராம் யெச்சூரி (72) கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நிமோனியா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (செப். 12) பிற்பகல் 3.05 மணிக்கு மறைந்தார். மருத்துவக் கல்விக்காகவும், ஆய்வுக்காகவும் அவரது குடும்பத்தினர் அவரது உடலை தானமாக அளித்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஒருநாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கிறீங்க..? சுகாதாரத்துறை நிபுணர்களின் எச்சரிக்கையை பாருங்க..!!

English Summary

After Sitaram Yechury’s death, his body was donated to AIIMS, Delhi.

Chella

Next Post

ஆண்கள், தங்களை விட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கு இது தான் காரணமா..!

Thu Sep 12 , 2024
While it's normal to be attracted to girls at a young age, some men find themselves attracted to older women.

You May Like