fbpx

சிவாஜிக்கு கிடைக்காத வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சத்யராஜ்.!


நிறைய மேடை நாடகங்கள் மூலம் பிரபலம் அடைந்து அதன் பின்னர் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இவரது நிஜ பெயர் வி.சி கணேசன். சிவாஜி கணேசன் நடிப்பை பற்றி தெரிந்து கொள்ளாதவர்களே இருக்க முடியாது. 

இன்றளவும் அவரது கதாபாத்திரங்கள் குறித்து பலரும் வியக்ககூடிய வகையில் தான் அவர் நடித்திருப்பார். வி.சி கணேசன் என்ற பெயர் கொண்ட நடிகர் சிவாஜியின் நாடகத்தில் நடித்த போது அதை பார்த்து வியந்த பெரியார் சிவாஜிக்கு, ‘சிவாஜிகணேசன். என்ற பெயரை வைத்துள்ளார். 

அந்த பெயர் நாளடைவில் பிரபலமாகி அவரது பெயராகவே மாறிவிட்டது. இந்த நிலையில், சிவாஜி கணேசனுக்கு தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பெரியாக நடிக்க வேண்டும் என்ற  ஆசை இருந்தது. ஆனால், அவர் நடிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை என கூறப்படுகிறது.

ஞான ராஜசேகரன் இயக்கிய “பெரியார்” திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் தந்தை பெரியாராக நடித்தார். ஏனெனில் பெரியாரின் மேல் மிகத் தீவிரமான ஈடுபாடு உடையவர் சத்யராஜ். 

இப்படத்தில் “பெரியார்” வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தந்தை நடித்துள்ளார் என்பதை விட  சத்யராஜ் பெரியாராக வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். பெரியார் கதாப்பாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிக்க ஆசைப்பட்டதை தொடர்ந்து சத்யராஜ் அக்கதாப்பாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Baskar

Next Post

போக்குவரத்து துறையில் புதிய விதி முறை … தலைக்கவசம் அணியாவிட்டால் இவ்வளவு அபராதமா?

Thu Oct 20 , 2022
தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி , தலைக்கவசம் அணியவில்லை என்றாலோ , விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினாலோ புதிய விதிமுறைப்படி கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி தலைக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இந்த புதிய மோட்டார் வான சட்டத்தின் படி ஆட்டோ ஓட்டுனர்கள் பயணி குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தை இயக்க மறுத்தால் அவர்களிடம் ரூ.500 அபராதம் […]

You May Like