மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தினமும் அவரது ரசிகர்களும், கட்சியினரும் வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்கில் அவரை கடைசியாக காண லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடியதும் எல்லோராலும் காணக் கூடியதாக இருந்தது. தற்போது அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்களின் அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல நடிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த வண்ணம் உள்ளனர். தற்போது நடிகர் சிவ கார்த்திகேயன் சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த விஷயத்தை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து சிவகாத்திகேயனை கலாய்த்துள்ளார்.
அதாவது ஒருவாரமாக சென்னையில் இருந்த சிவகார்த்திகேயன் இன்று சென்னை திரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சென்னையில் இருந்து கொண்டு விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இப்போதா வருகிறார் சிவகார்த்திகேயன் என்று ட்ரோல் செய்து வருகின்றனர். இதேபோல், அவர் மற்ற நடிகர்களையும் வைத்து கலாய்த்தது குறிப்பித்தக்கது.