fbpx

சிவகார்த்திகேயன் பண்ண துரோகத்தை மறக்கவே முடியாது..!! இனி அவரு கூட சேர மாட்டேன்.!! டி இமான் அறிவிப்பு..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் டி இமான். இவர் சிறந்த பாடகராகவும் அசத்தி வருகிறார். பல நடிகர்களுக்கு இசையமைத்திருந்தாலும், டி இமான்-நடிகர் சிவகார்த்திகேயன் காம்போ எப்போதுமே நன்றாக இருந்துள்ளது.

மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட சிவகார்த்திகேயனின் 5 படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். ஆனால், வெகு நாளாக இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருக்கின்றனர். அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட டி இமானிடம், ஏன் இப்போது சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த டி இமான், “இனி சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது இந்த ஜென்மத்தில் கஷ்டம். தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் அவருடன் இணைந்து பயணிக்க முடியாது. ஏனென்றால், அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அதை நான் வெளியில் சொல்ல முடியாது. எனக்கு துரோகம் செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது? என்று நான் சிவகார்த்திகேயனிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை நான் வெளியில் சொல்ல முடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் குழந்தைகளின் எதிர்காலம் தான்.

அடுத்த ஜென்மத்தில் அவரும் நடிகராக இருந்து, நானும் இசையமைப்பாளராக இருந்தால் ஒரு வேலை இணைந்து பணியாற்றலாம். இனிமேல் சிவகார்த்திகேயனின் படங்கள் நான் நிச்சயம் பண்ணமாட்டேன். இத்தனை வருடங்களாக அவருடன் நான் ஒரே குடும்பமாக இருந்து பேசி பழகியதால், அவர் துரோகம் செய்தது எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாத வலியை கொடுத்தது” என்று டி இமான் பேசியுள்ளார்.

Chella

Next Post

நிரம்பி வழியும் பிணவறைகள்..!! ஐஸ்கிரீம் டிரக்குகளில் அடுக்கப்படும் உடல்கள்..!! காஸாவில் தற்போதைய நிலை..!!

Tue Oct 17 , 2023
இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், உயிரிழந்தோர்களின் உடல்களை வைக்க இடமில்லாமல் ஐஸ்கிரீம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால், ஐநா சபை 1947இல் பாலஸ்தீனத்தில் இருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடந்த 75 […]

You May Like