fbpx

சிவகாசி பட்டாசு வெடி விபத்து..!! 6 கடைகளுக்கு அதிரடி சீல்வைப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற இரு வேறு பட்டாசு வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தொடர் விபத்துக்கள் நடைபெறுவதால், விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் என பல பிரிவுகளாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக வைத்திருந்த மற்றும் பட்டாசு கடைகளின் அருகிலேயே உரிமம் பெறாமல் குடோனில் இருப்பு வைத்திருந்த 6 பட்டாசு கடைகளை கண்டுப்பிடித்து கடைகளுக்கு சீல் வைத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!! ரொம்ப கஷ்டம்..!!

Fri Oct 20 , 2023
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது விநியோக திட்டம் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. அரசு தரும் ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காரணமாக கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள் பலன் அடைந்து வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் […]

You May Like