இளம் வயது பெண்களுக்கு இருக்கின்ற ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் முகப்பருக்கள், முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் வந்து சென்ற தழும்புகள், முகம் கருமையாக காணப்படுவது, டார்க் ஸ்பாட் போன்றவைகளால் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்து முகம் பொலிவுடன் காணப்பட வீட்டிலேயே இயற்கையாக செய்யக்கூடிய Face cream இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: ஊற வைத்த பச்சரிசி, ஊற வைத்த பச்சைப்பயிறு, கற்றாழை ஜெல், பாதாம் ஆயில். பச்சரிசி மற்றும் பச்சைப்பயிறு இயற்கையாகவே நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்கி முகத்திற்கு நல்ல ஒரு குளிர்ச்சியையும் ஈரப்பதத்தையும் கொடுக்கும். மேலும் கண்ணைச் சுற்றி வரக்கூடிய கருவளையங்கள் முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள் என அனைத்தையும் சரி செய்யும் சக்தி இந்த அரிசி மற்றும் பச்சைபயிரில் மிகுந்து உள்ளது.
செய்முறை: முதலில் இரண்டு ஸ்பூன் ஊறவைத்த பச்சரிசி மற்றும் இரண்டு ஸ்பூன் ஊற வைத்த பச்சைப்பயிறு இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டி எடுத்த தண்ணீரை 2 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அதில் மேலாக தண்ணீரும் கீழே மாவும் படிந்திருக்கும். எனவே மேலே உள்ள தண்ணீரை கீழே ஊற்றி விட்டு அடியில் படிந்து இருக்கக்கூடிய மாவை மட்டும் நாம் பயன்படுத்த போகிறோம்.
அந்த மாவில் இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். பாதாம் ஆயில் இல்லை என்றால் மரச்செக்கு தேங்காய் எண்ணெய் அல்லது விட்டமின் ஈ ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். இதையெல்லாம் சேர்த்து நன்கு கலந்து ஈரம் இல்லாத ஒரு ஏர் டைட் கண்டைனரில் சேமித்துக் கொள்ளவும். இதை நாம் இயற்கையாக தயாரித்ததால் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே பிரிட்ஜில் வைத்து இதை பயன்படுத்தி வரலாம்.
இதை லைட்டாக சிறிதளவு தொட்டு முகத்தில் தடவினாலே போதுமானது. இதை இரவு தூங்குவதற்கு முன்னால் தடவிக் கொண்டு தூங்கினால் மிகவும் நல்லது. இல்லை என்றால் காலை எழுந்தவுடன் முகத்தை கழுவி விட்டு இதை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு பிறகு குளிக்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் கூட பயன்படுத்தி வரலாம். இரவு தூங்குவதற்கு முன்னால் இதை அப்ளை செய்தால் இரவு முழுவதும் அப்படியே விட்டு காலை எழுந்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து இதை பயன்படுத்தி வர முகம் இயற்கையாகவே நன்கு பொலிவாக காணப்படும். இதை கருமை இருக்க கூடிய கைமுட்டி கால் முட்டி என அனைத்து பகுதிகளிலும் தடவி வர அந்த கருமைகள் நீங்கும். இந்த கிரீமை ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் வரை தாராளமாக ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம்.