fbpx

“மெலிந்த உடல்” சக மாணவர்களின் கேலி! இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்!!!

கனடா நாட்டில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த பிரபல டிக் டாக் பிரபலம் மேகா தாகூர் திடீரென்று மரணமடைந்த சம்பவம் அவருடைய ரசிகர்களை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

அவருடைய மரணத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஒரு வயதாக இருந்த சமயத்தில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருடைய குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்தது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தான் இவரும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள்.

மிகவும் ஒல்லியான உடல்வாகுவை கொண்ட இவர், பள்ளி படிப்பின்போது தன்னுடைய சக மாணவர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஆகவே இவர் மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

டிக் டாக் சமூக வலைதளத்தில் பெண்களுக்கும், அடுத்தவர்களுக்கும் முன்னுதாரணமாக பல தன்னம்பிக்கையான பதிவுகளை வெளியிடுவதில் இவர் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். 9 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை இவர் தன் வசம் வைத்திருக்கிறார். 21 வயதே ஆன மேகா திடீரென்று, நவம்பர் மாதம் 24 ஆம் தேதி மரணமடைந்ததாக குறிப்பிட்டு, அவருடைய பெற்றோர் மேகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்கள்.

அந்த பதிவில், எங்களுடைய வாழ்வின் ஒளியாக இருந்த அன்பான, அக்கறை கொண்ட அழகான மகள் மேகா நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அதிகாலையில் திடீரென்று எதிர்பாராத விதத்தில் மரணமடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனை கண்ட அவருடைய ரசிகர்கள் அவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். மேகாவின் மரணத்திற்கு காரணம் என்ன? என்று அவர்களுடைய பெற்றோர் தரப்பில் இதுவரையில் எதுவும் கூறப்படவில்லை. இருந்தாலும் கார் விபத்தில் மேகா உயிரிழந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

Kathir

Next Post

ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தேர்வு! ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

Sat Dec 3 , 2022
கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக இருக்கின்ற விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பதவிகளுக்கு நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அவரவர் மாவட்ட கூட்டுறவு சங்க ஆள் சேர்ப்பு அலுவலகம் தொடர்பான இணையதளத்திலிருந்து இதனை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு கல்வி தகுதி மற்றும் நேர்காணல் தேர்வு உள்ளிட்டவற்றில் அவரவர்கள் வாங்கிய ஒட்டுமொத்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தும், அந்தந்த வகுப்புதாரர் சார்ந்து இருக்கின்ற இன […]

You May Like