கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த கந்தி குப்பம் பகுதியில் கிங்ஸ்லி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தேசிய மாணவர் படையின் பயிற்சியாளராக சிவராமன் இருந்துள்ளார். மேலும், இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அதில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான், கடந்த 5ஆம் தேதி என்எஸ்எஸ் மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் கேம்ப் நடைபெறப் போவதாகவும், மாணவர்கள் பள்ளியிலேயே தங்க வேண்டும் என்று சிவராமன் கூறியுள்ளார்.
இதையடுத்து, 17 மாணவிகள் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் தங்கியுள்ளனர். கடந்த 9ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மாணவிகள் தங்கியிருந்த ஆடிட்டோரியத்திற்குள் சென்ற சிவராமன், 12 வயது மாணவி ஒருவரை தனிமையில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரை கடுமையாக தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசாரிடம் அந்த சிறுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
”நான் கந்திகுப்பத்தில் உள்ள கிங்ஸ்லி ஸ்கூலில் 8ஆம் வகுப்பு படிக்கிறேன்.
கடந்த 5ஆம் தேதி முதல் கிங்ஸ்லி ஸ்கூலில் என்சிசி கேம்ப் நடைபெற்றது. இதில் என்னுடன் சேர்த்து பெண்கள் 17 பேர் இருந்தோம். நள்ளிரவு 3 மணியளவில் நாங்கள் அனைவரும் ஸ்கூலில் உள்ள ஆடிட்டோரியத்தில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு அக்கா என்சிசி மாஸ்டர் சிவா சார் கூப்பிடராங்க எழுந்து போ என்று என்னை எழுப்பி விட்டார். பின்னர், அங்கு சென்றபோது இருட்டாக இருந்தது. அந்த இடத்தில் சிவா சார் இருந்தார்.
நீ இங்க வா, நான் இங்கே இருக்கேன் என்று கை அசைத்து காட்டினார். நானும் போனேன். பின்னர் அவர் அருகில் என்னை உட்காரச் சொன்னார். சார் நான் படிக்கட்டுக்கு கீழே சேரில் உட்காருகிறேன் என்று சொன்னேன். ஒபே தி ஆர்டர் என்று சொல்லி எனது இடது கையை பிடித்து அவர் அருகில் உட்கார வைத்தார். பின்னர் என் மார்பு பகுதியில் கையை வைத்து அழுத்தினார். நான் கிளம்புகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் என்சிசியில் மெடிக்கல் செக்கப் என்று சொல்லி, பெண்களுக்கு பயம், வெட்கம் இருக்கக் கூடாது என்று முதல் நாளே அறிவுரை கூறினேன்.
இப்போது எதற்கு வெட்கப்படுகிறாய் என்று கூறி எனது கையை பிடித்து இழுத்து கீழே படுக்க வைத்தார். பின்னர், எனது வாய் மேல் கையை வைத்து மூடிக் கொண்டார். என்னால் கத்த முடியவில்லை. பின்னர் அவரது வாயை எனது வாய் மேல் வைத்தார். நான் அணிந்திருந்த ஆடை, உள்ளாடையை கழட்டினார். அவரது பிறப்புறுப்பை வைத்து தவறாக நடந்துகொண்டார். 10 நிமிடங்கள் என்னை விடவில்லை. அப்போது எனக்கு அதிகமாக வலி ஏற்பட்டது. 10 நிமிடங்களுக்கு பிறகு அவர் என்னை விட்டு விட்டார். எனக்கு பயம், படபடப்பு வந்து நான் அழுதுக் கொண்டே ஆடிட்டோரியம் சென்று ஒரு அக்காவிடம் படுத்து கொண்டேன்.
பின்னர் அதிகாலை சுமார் 4 மணிக்கு கிரவுண்டுக்கு செல்ல அனைவரும் எழுந்து தயாரானார்கள். அப்போது என்னை சத்யா மேடம் எழுப்பினாங்க. நான் அவரிடம் எனக்கு அடி வயிறு வலிக்கிறது என்று கூறினேன். சரி படுத்துக்கோ என்று சொல்லி விட்டு கிளம்பிட்டாங்க. காலை 7 மணிக்கு டீ பிரேக்கிற்கு அனைவரும் டம்ளர் எடுக்க ஆடிட்டோரியம் வந்தார்கள். அப்போது சீனியர் அக்காவிடம் நான் எனக்கு நடந்ததை சொன்னேன்.
அந்த அக்காவின் அம்மா ஜெனிபர், கிங்ஸ்லி ஸ்கூலில் டீச்சராக வேலை செய்கிறார். அதனால் அந்த அக்கா, அப்புறம் எங்க அம்மாவிடம் சொல்லலாம் என்று சொன்னாங்க. பிறகு நான் வேறு உடை மாற்றிக் கொண்டு நானும் பெரேடுக்கு போனேன். பின்னர் நான் எனது தோழியிடம் சிவா சார் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். உன்னிடம் அவர் அப்படி செய்தாரா என்று கேட்டேன். எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறினாள்.
பிறகு சீனியர் அக்காங்க மற்றும் நான் அனைவரும் சேர்ந்து சதீஷ்குமார் பிரின்ஸ்பாலிடம் நடந்த விவரத்தை சொன்னோம். அதற்கு அவர், இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாதீங்க. வீட்டில் யாருக்கும் சொல்ல வேண்டாம். பெற்றோர் ரொம்ப கஷ்டப்படுவாங்க என்று சொன்னார். பிறகு நாங்கள் அனைவரும் கிரவுண்டுக்கு சென்று பெரேடு முடித்து ஆடிட்டோரியம் வந்தோம். 9ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஆடிட்டோரியத்தில் அனைவருக்கும் பரிசு கொடுத்தார்கள்.
பிரின்ஸ்பால் எனக்கு ஒரு சீல்டு மற்றும் மூன்று மெடல் கொடுத்தார். பிரின்ஸ்பால் மீண்டும் எங்கள் அனைவரிடமும் அந்த விஷயத்தை பெரிதுபடுத்தாதீங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார். பிறகு மாலை 5 மணிக்கு ஸ்கூல் பஸ்ஸில் ஏறி எனது பாட்டி வீட்டிற்கு சென்றேன். பிறகு நான் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வந்தேன். கடந்த 16ஆம் தேதி இரவு எனக்கு பெண் உறுப்பு ரொம்ப வலித்ததால் நான் அழுதேன். அப்போது என் அம்மா என்னை விசாரிச்சாங்க. முதல்ல நான் எதுவும் இல்லை என்று சொன்னேன். பிறகு நான் நடந்ததை கூறினேன். அப்புறம் என் அம்மா என்னை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அட்மிட் செய்தார்” என்று வாக்குமூலத்தில் நடந்தவற்றை கூறியுள்ளார் அந்த சிறுமி.
Read More : பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி..!! தமிழ்நாடு அரசின் திட்டத்தை பாராட்டிய ஐகோர்ட் கிளை..!!