fbpx

கோரைப் பாயில் படுத்தால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்குமா!!!

பொதுவாக நமது முன்னோர்கள் பாய் விரித்து தூங்குவார்கள். ஆனால் தற்போது நாகரீகம் என்ற பெயரில் நாம் கட்டில், மெத்தையில் தான் தூங்குகிறோம். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் பாயில் தூங்குவதால், நமக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு, பல்வேறு மருத்துவ நன்மைகளும் கிடைக்கின்றன. அப்படி ஒரு சிலர் பாய் வாங்கினாலும், பார்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற பிளாஸ்டிக் பாய் வாங்கி விடுகின்றனர். இதனால் எந்த பயனும் இல்லை. அதனால் இயற்கையாக கிடைக்கும் கோரைப் பாய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ‘பாயில் படு, நோயை விரட்டு’ என்னும் பழமொழிஏ உள்ளது. அப்படி கோரைப் பாயில் தூங்குவதால் பல நன்மைகள் கிடைக்கும். அப்படி என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

கோரைப் பாய் உடல் சோர்வு, மந்தம், ஜுரம் போக்கக்கூடியது. கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி வராது. மேலும், சுகப்பிரசவம் நடக்கவும் அது வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். மேலும், பிறந்த குழந்தையைப் பாயில் உறங்க வைப்பதால் கழுத்து சுளுக்கு பிடிக்காது. குழந்தையின் முதுகெலும்பு சீர்ப்படும். மேலும், சிறுவர்கள் பாயில் உறங்கினால் இளம் வயது கூன் விழாது என்கின்றனர். பெரும்பாலான முதியோர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதே நல்லது. ஏனென்றால் 60 வயதிற்கு மேல் உடலில் இரத்த ஓட்ட பிரச்சினை இருக்கும். பாயில் சமமாக கால் கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது,

Maha

Next Post

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் அந்நாட்டு இந்திய தூதரகத்தை அணுகலாம்...! மத்திய அரசு அறிவிப்பு...!

Sun Oct 8 , 2023
இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் அந்நாட்டு இந்திய தூதரகத்தை அணுகலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள காசா பகுதியில் ஆளும் ஹமாஸ் போராளிக் குழு மீது தாக்குதலை நடத்தப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியதுடன், போராளிகள் பல இடங்களில் வான், தரை மற்றும் கடல் வழியாக பல இடங்களில் ஊடுருவி, நாட்டைப் பிடித்தனர். படையெடுப்பு தொடங்கி பல மணிநேரங்களுக்குப் பிறகும், ஹமாஸ் போராளிகள் […]

You May Like