டெக்சாஸில் வசித்து வருபவர், ஜெசிகா வீவர். இவருக்கு 3 வயதான ஆண்டனி லியோ மலா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், ஜெசிகா வீவர் எல் பாசோவில் உள்ள கெம்ப் கோஹன் வாட்டர் பூங்காவுக்கு கடந்த மே மாதம் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த குளத்தில் தனது குழந்தையை விட்டுவிட்டு அருகில் உள்ள பலகையில் அமர்ந்துள்ளார். பலகையில் அமர்ந்த ஒரு சில நிமிடங்களில் ஜெசிகா போன் பார்க்க தொடங்கியுள்ளார். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆண்டனி, ஆழம் அதிகமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளான்.
ஆனால் அதை ஜெசிகா கவனிக்கவில்லை. இதனால் குழந்தை துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை மீட்ட காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், தாய் தன் மகனை கவனிக்காமல் நீண்ட நேரம் போனில் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, ஜெசிகாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவர் 10,000 டாலர் கொடுத்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், அவர் தன் மகனின் இறப்புக்கு பூங்கா நிர்வாகம் மற்றும் அங்கு அலட்சியமாக செயல்பட்ட உயிர்காப்பாளர்களே காரணம் என கூறி அவர்கள் மீது 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, ஜெசிகா வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.